உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலம் குத்தகை ஏலம் பெயரளவிற்கு நடந்தது

கோவில் நிலம் குத்தகை ஏலம் பெயரளவிற்கு நடந்தது

 நெல்லிக்குப்பம்-எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில் நிலத்திற்கான குத்தகை ஏலம் பெயரளவிற்கு நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான குத்தகை ஏலம் ஆண்டுதோறும் நடக்கும்.நடப்பு ஆண்டு குத்தகை ஏலம் பல பிரச்னைகளால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அறநிலையத்துறை மூலம் முறையான அறிவிப்பு இல்லாததால், புதிய ஆட்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர். மூன்று முறை ஏலம் ஒத்திவைக்கபட்டதால் வேறு வழியின்றி பழைய குத்தகைதாரர்களிடம் மேலும் ஒரு வருடத்துக்கு குத்தகை வழங்கினர். பெயரளவுக்கு நடந்த ஏலத்தில் ஏக்கருக்கு பழைய குத்தகையைவிட வெறும் 100 ரூபாய் மட்டுமே கூடுதலாக வைத்து ஏலம் விடப்பட்டது. முறையாக அறிவித்து ஏலம் விட்டிருந்தால் பல ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !