கடம்பாடி கோவில் குத்தகை ரூ.4.71 லட்சம் வருவாய்
ADDED :1518 days ago
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், குத்தகை ஏலம், 4.71 லட்சம் ரூபாயக்கு ஏலம் போனது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், ஹிந்து சமய அறநிலைய துறையின், ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வகிக்கும், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது.இதன், பல வகை ஆண்டு குத்தகை ஏலம், துறை ஆய்வாளர் சிவகாமி, செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில், நேற்று நடந்தது.அர்ச்சனை பொருட்கள் விற்பனை கடை, ஏலம், 2.71 லட்சம் ரூபாய், பிரசாத விற்பனை கடை ஏலம், 1.09 லட்சம் ரூபாய், நேர்த்திக்கடன் கோழிகள் ஏலம், 72 ஆயிரம் ரூபாய், நில குத்தகை, 19 ஆயிரத்து 120 ரூபாய் வீதம், ஏலம் விடப்பட்டதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.