நடிகர் யோகிபாபு கட்டிய வராகி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1516 days ago
செய்யாறு: செய்யாறு அருகே, திரைப்பட சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்நகரம்பேடு கிராமத்தில், சிரிப்பு நடிகர் யோகிபாபு தன் சொந்த நிலத்தில், வராகி அம்மன் கோவிலை புதிதாக கட்டினார். இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னாதாக யாக சாலை பூஜை செய்து கலச ஊர்வலம் நடந்தது. பின், புனித நீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நடிகர் யோகி பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். பின், மூலவர் வராகி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி, நடிகர் யோகிபாபு அபிஷேகம் செய்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.