சூலூரில் ராகவேந்திர சுவாமிகள் 350 வது ஆராதனை விழா
ADDED :1516 days ago
சூலூர்: சூலூர் மூல மிருத்திகா பிருந்தா வனத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. சூலூர், கலங்கல் ரோட்டில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மூல மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இங்கு, சுவாமிகளின், 350 வது ஆராதனை விழா, ஐந்து நாட்கள் நடந்தது. கடந்த, 22 ம்தேதி காலை சத்தியநாராயண பூஜை, கனகாபிஷேகம் நடந்தது. 23 ம்தேதி பூர்வாராதனை பூஜைகளும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த நாளான, 24 ம்தேதி மத்தியாராதனை மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, பிரகலாதர் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தினமும் பக்தர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐந்து நாளும் பக்தர்கள் ஏராளமோனார் பங்கேற்று வழிபட்டனர். ஆராதனை விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சேவா அறக்கட்டளை யினர் செய்திருந்தனர்.