திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா
ADDED :1501 days ago
திசையன்விளை: திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா நடந்தது. திசையன் விளை , வடக்குத்தெரு, சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்புடன் 6 நாட்கள் நடைபெறும். கொரோனோ தொற்று காரணமாக தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த ஆண்டு கொடைவிழா மிகவும் எளிமையாக மூன்று நாட்கள் நடந்தது. விழாவில் சிவலப்போரியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, ஆனந்த விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் மஞ்சள் பெட்டி ஊர்வலங்கள், அபிஷேகபூஜை, வில்லிசை, மகுட ஆட்டம், அலங்கார பூஜை , அன்னபூஜை, மஞ்சள் நீராடல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்ராஜ் மற்றும் நிர்வாககுழுவினர்கள் செய்திருந்தனர்.