பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்டம் நிகழ்வுகள்
ADDED :1547 days ago
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் பிராமணர் சங்கத்தின் சார்பில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது. காட்டுமன்னார்கோவில் பிராமணர் சங்கத்தின் சார்பில் ஆவணி அவிட்டத்தை தொடர்ந்து பெரியகுளம் வடகரை ஸ்ரீ ஞான விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிவரை நடந்தது. பிராமணர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக யக்ஙோபவீதம் போட்டுக்கொள்ளும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வெங்கடேஷ் வரவேற்றார்.கும்பகோணத்தைச் சேர்ந்த பிரவீன் ஷர்மா பங்கேற்று யக்ஙோபவீதம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் ராஜா, சுரேஷ், விஸவருணாசலம், ஞானசக்தி, கணேஷ், செந்தில்குமார், குரு மற்றும் மகளிர் அணி சார்பில் புவனேஸ்வரி, நித்தியா, பங்கேற்றனர். மணிகண்டன் நன்றி கூறினார்.