உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணிக்கவாசகர் குருபூஜை விழா

மாணிக்கவாசகர் குருபூஜை விழா

மதுரை: மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.வி.வி.பி., பெயின்ட் லேண்ட் நிறுவன உரிமையாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாணிக்கவாசகர் பணி மன்றம் நிறுவனர் பிச்சையா முன்னிலை வகித்தார். விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன், மாணிக்கவாசகரும் திருவாசகமும் என்னும் தலைப்பில் பேசுகையில், "" மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை, தமிழ்மொழியில் அமைந்த வேதம் எனலாம். அருள்நாட்டம் கொண்டவர்களுக்கு அருள் தாகத்தை திருவாசகம் வளர்க்கிறது. சுடர் விளக்கிற்கு துண்டுகோல் போன்று திருவாசகம் உள்ளது, என்றார்.தருமை ஆதினபுலவர் குருசாமி தேசிகர் குருபூஜை நடத்தினார். கமலக்கண்ணன் சிவபுராணபாரயணம் செய்தார். டாக்டர் கண்ணன் வரவேற்றார். விவேகானந்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !