உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை (செப்.1) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இன்று காலை சங்கல்பமும், இரவில் ஆச்சார்யர் ரக்ஷா பந்தனமும் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு அருகில் உற்ஸவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள கொடிமரத்திற்கு பூஜை செய்து கொடியேற்றம், தீபாராதனை நடைபெறும்.தினசரி காலை, மாலை உற்ஸவர் பிரகாரம் சுற்றி வருதல் நடைபெறும். இந்த விழா செப்.10 ல் விநாயகர் சதுர்த்தியன்று நிறைவடையும். கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி கோயிலின் உட்பகுதியில் மட்டும் உற்ஸவம் நடைபெற உள்ளது. தேரோட்டம், கஜமுகசூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !