சிறுபாக்கம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
ADDED :1533 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை சுவாமிக்கு, பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. பின், மாலை 4:00 மணியளவில் வரதராஜ பெருமாள் சுவாமி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி வீதியுலா நடந்ததில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், மாங்குளம், பொயனப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.