திருப்பரங்குன்றத்தில் கோகுலாஷ்டமி
ADDED :1531 days ago
திருப்பரங்குன்றம் : கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலுள்ள கிருஷ்ணர் சிலைக்கு பூஜை நடந்தது. திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் உற்ஸவர், மூலவருக்கு அபிஷேகம், பூஜைகள், அலங்காரமானது. விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு பூஜை நடந்தது. சிறுமிகள் கிருஷ்ணர் வேடமணிந்து கோலாட்டம், உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.