முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
ADDED :1519 days ago
வாலாஜாபாத்: முத்துமாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆவணி மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும்.கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின், நேற்று முன்தினம் ஆவணி திருவிழா, சமூக இடைவெளியுடன் நடந்தது. இதை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு பொன்னியம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டனர்; கரக ஊர்வலம் நடந்தது. பகல் 3:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு, அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலாவும் நடந்தது. அவரவர் வீட்டில் இருந்து, கிராம மக்கள் தீபாரதனை பெற்றுக்கொண்டனர்.