உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்க்கை மலர...

வாழ்க்கை மலர...


* வருமானத்திற்கு ஏற்ப செலவு செய். உன் வாழ்க்கை மலரும்.  
* உன்னை சீர்படுத்து. சமூகம் தானாகவே சீராகும்.  
* வாழ்வில் நாடுவதற்குரிய ஒரே நபர் கடவுள் ஒருவரே.
* ஒழுக்கத்தை கடைபிடி. மகிழ்ச்சியாக வாழலாம்.  
* கடவுளே சத்தியம். சத்தியமே கடவுள்.
* நல்லவனாக இரு. நல்லதையே செய்.
* கடவுளின் திருநாமத்தை விடச் சிறந்தது கிடையாது.
* வாழ்க்கையின் லட்சியத்தை அடைவதற்கான வழியே மதம்.
* துன்பத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் நாத்திகனும் கடவுளை வணங்குகிறான்.
* பணத்தை விட விலை உயர்ந்தது நேரம்.
* உனது துன்பத்தில் பங்கேற்பவனே உண்மையான நண்பன்.
* சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.
* சோதனையை பொறுமையுடன் சகித்துக் கொள்.  
* பொற்றோரின் புத்திமதிகளை கேள்.  
* மற்றவரின் புகழை கெடுக்காதீர்.  
* நண்பர்களை பெருக்காதீர்.
* நற்பண்பும், நற்செயல்களும் ஒருபோதும் வீண்போகாது.
* ஒருநாட்டின் விதி அந்நாட்டின் பெண்கள் கையில்தான் உள்ளது.
* இன்ப, துன்பங்களை சந்தித்த பிறகே ஒருவரின் மனம் பக்குவப்படுகிறது.
* ஏற்ற, இறக்கமே வாழ்க்கையின் அடிப்படை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !