உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

புத்தேரி மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

 பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மன் சுவாமிக்கு ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ்பகல் 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை, சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடந்தது . பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். மேலும் அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !