சோளீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மாறநாயனார் குருபூஜை
ADDED :1527 days ago
இளையான்குடி : இளையான்குடி ராஜேந்திர சோளீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மாற நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமி - அம்பாளுக்கும்,மாறநாயனார் மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து சிவாக்கர தேசிகர் சுவாமி திருமுறை பற்றிய அருளுரை நடைபெற்றது.இரவு மாறநாயனாருக்கு சிவபெருமான் முக்தி அருளும் ஜோதிக் காட்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை இளையான்குடி மாற நாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.