அமாவாசை நாளில் அருள்பாலித்த ஆதிபராசக்தி
ADDED :1527 days ago
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் செவ்வாடையுடன் வந்து வழிபாடு செய்தனர். மாரியம்மன் கோவில், ஒதிமலை ரோட்டில் உள்ள பெரியம்மன் கோவில், எல்லப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் உள்பட 20-க்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது, பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று அம்மனை தரிசித்தனர்.