உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வருக்கு கடிதம்

விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வருக்கு கடிதம்



 சென்னை-நிபந்தனைகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு, அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம் வருமாறு:கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், நிபந்தனைகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, அனுமதி அளித்துஉள்ளனர். தமிழகத்தில் மட்டும் மறுப்பது ஏற்புடையதாக தெரியவில்லை. வேளாண் திருத்த சட்டம், நீட் தேர்வு என பல விஷயங்களில், மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு, விநாயகர் சதுர்த்தி விஷயத்தில் மட்டும், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை சொல்லி முரண்டு பிடிப்பதில், ஹிந்துக்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.பள்ளி, கல்லுாரி, கடற்கரை, வணிக வளாகங்கள் என, இயல்பான வாழ்க்கை வந்துள்ள சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்க வேண்டாம். நிபந்தனைகளுடன் கூடிய கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !