வில்லியனுார் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்
ADDED :1578 days ago
புதுச்சேரி : உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்த நாளையொட்டி, வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, பெருமாளுக்கு மங்கள ஆரத்தி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ், முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஹரி நமோநாராயணா, கண்ணபிரான், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.