சுந்தர விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை துவக்கம்
ADDED :1522 days ago
புதுச்சேரி : புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது.
நாளை (9ம் தேதி) மாலை 6.௦௦ மணிக்கு, பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 10ம் தேதி காலை 6.௦௦ மணிக்கு சதுர்த்தி விழாவையொட்டி, அபிஷேகம், தீபாராதனை, சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை, தினமும் இரவு 7.௦௦ மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.16ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 17ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு சுந்தர விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடக்கிறது.18ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு சுந்தர விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி உள்புறப்பாடு, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.