ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :1523 days ago
உடுமலை: உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் ஜெயந்தி உற்சவ விழாவில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை பெரியகடை வீதி, நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா, கடந்த, 31ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினமும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது.ஜெயந்தி உற்சவத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாலை, 3:30க்கு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் வாரணமாயிரம் பாசுரங்கள் சேவை, ராமானுஜர் நுாற்றந்தாதி சேவை மற்றும் சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.