தடையை மீறி வைத்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்து கரைப்பு
ADDED :1526 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி, செக்கானூரணி பகுதிகளில் தடையை மீறி வைத்து பறிமுதல் செய்த 5 விநாயகர் சிலைகளை போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகள் வாலாந்தூர் கண்மாயில் கரைத்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட இந்த ஆண்டு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி உசிலம்பட்டி செக்கானூரணி பகுதிகளில் வைத்திருந்த ஐந்து விநாயகர் சிலை போலீசார் பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி பெருமாள் கோயிலில் இருந்து நான்கு சிலைகளும், செக்கானூரணியில் பறிமுதல் செய்த ஒரு சிலையையும் வாலாந்தூர் கண்மாய்க்கு கொண்டு சென்றனர். டி.எஸ்.பி., நல்லு, அறநிலையத்துறை செயல்அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் போலீசார் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பின்னர் சிலைகளை நீரில் கரைத்தனர்.