உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பூவாணிப் பேட்டை, கூ.கூ. விநாயகர் கோவிலில், மிளகாய் நவதானிய வியாபாரிகள் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு கொழுக்கட்டை, கொண்டைக் கடலைகள், படையல் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.மங்கலம் இந்திராநகர் விநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு பக்தர்களுக்கு கொழுக்கட்டை, கொண்டைக்கடலை, பிரசாதம் வழங்கப்பட்டன. ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி வீர விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !