அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1643 days ago
சோழவந்தான்: பாலமேடு அருகே எர்ரம்பட்டியில் குருநாதன் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.செப்.,11 முதல்கால யாக பூஜை துவங்கி வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகசாலை, கோ பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார் பிரகாஷ் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.