கிருஷ்ணர் கோயிலில் விமான மண்டபம் உட்பட திருப்பணி
ADDED :1529 days ago
தேவகோட்டை--தேவகோட்டை அம்மச்சி ஊரணி பகுதி வாசுதேவ பெருமாள் கிருஷ்ணர்கோயிலில் விமானம் மண்டபம் உட்பட திருப்பணி செய்யப்பட்டது. வாசுதேவ பட்டாச்சார்யார் தலைமையில் பட்டர்கள் ஹோமங்கள் நடத்தி ஐந்து கால பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வாசுதேவ பெருமாளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா ஸம்ப்ரோஷணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம்செய்தனர். கோயில் பரம்பரை டிரஸ்டிகள், அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்தனர்.