உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

 பொங்கலூர்: பொங்கலூர் மீனாட்சி வலசு சடையம்பதி அருகிலுள்ள கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஸா பந்தனம், காப்புக்கட்டுதல், மூர்த்திகளின் சக்திகளை கும்பத்தில் எழுந்தருளச் செய்தல், முதற்கால யாகபூஜை, கோபுரத்தில் கண் திறத்தல், கலசம் வைத்தல், எந்திரார்பணம், தெய்வங்களை எழுந்தருளச் செய்தல் ஆகியன நடந்தது.

காலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனை, இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வருதல், கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், விநாயகர் மற்றும் கன்னிமார், கருப்பணசாமி, முனியப்பசாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகாதரிசனம், மகாதீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவசுப்பிரமணி குருக்கள், தங்கமணி குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை படியூர் மற்றும் கண்டியன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !