சாந்தாளீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி
ADDED :1564 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சாந்தாளீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர், 15 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், சைவ, வைணவ கோவில்களில் உழவாரப் பணி செய்து வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி அருகே உள்ள சாந்தாளீஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளாகத்தில் புதர் மண்டி இருந்த செடி, கொடிகளை அகற்றி சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடித்தனர்.