உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வத்தின் அருளை பெற...

தெய்வத்தின் அருளை பெற...


வழிகாட்டுகிறார் பாரதியார்

* பிறரை ஏமாற்றினால் தெய்வத்தின் அருள் கிடைக்காது.  
* தர்மத்தின் மூலம் பெறும் வெற்றியே நிலைக்கும்.
* செய்வதை துணிந்து செய்.
* கடவுள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும்.
* உயிர்களிடம் இரக்கம் காட்டு. அதுவே சிறந்த தர்மம்.   
* பெற்றோர் கொடுத்த செல்வத்தில் வாழாமல் சொந்தக் காலில் நில்லு.
* மனதை கட்டுப்படுத்து. அதுவே வெற்றிக்கான வழி.
* புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
* கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம்.
* பெண்களின் உதவி இல்லாமல் வளர்ச்சி இருக்காது.
* கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே.
* எதையும் தாங்கும் சக்தி அன்பிற்கு உண்டு.
* துன்பம் ஏற்படும்போது அதை தாங்கிக்கொள்.  
* நல்ல காலம் இருந்தால்தான் உனது முயற்சி வெற்றி பெறும்.  
* நீயே உன்னை திருத்திக்கொள்.
* எந்த முயற்சிக்கும் பலன் உண்டு.
* கடமையை உடனே செய்.  
* உன் மேல் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்.  
* குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் கற்றுக்கொடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !