வெற்றி வேண்டுமா...
அழைக்கிறார் சாரதா தேவியார்
* விடாமுயற்சி செய். வெற்றி பெறுவாய்.
* மனஅமைதி வேண்டுமா... பிறரது குறையை பார்க்காதே.
* பிரார்த்தனை செய்து கொண்டே இரு. உனது விருப்பம் நிறைவேறும்.
* கடவுளை நினை. சுகமாக இருப்பாய்.
* பொறுமைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
* பேச்சால் யாரையும் காயப்படுத்தாதே.
* உண்மையான அன்பின்றி கடவுளை உணர முடியாது.
* சாதனை செய்ய ஏற்ற காலம் இளைமைப்பருவமே.
* பக்தியின் மூலம் எதையும் வெல்லலாம்.
* கவலைப்படாதே... உனது பிரச்னை தீரும்.
* நீ ஒரு பொருளை மதித்தால் அந்த பொருளும் உன்னை மதிக்கும்.
* அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியில் ஈடுபடு.
* பணம்தான் பிரச்னைக்கு காரணம்.
* மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடுத்து.
* கடவுளை நேசி. துன்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
* உடல், மனம் சோம்பலால் கெடுகிறது.
* செய்த தவறை எண்ணி வருந்தாதே. அதை திருத்திக்கொள்.
* கடவுளின் திருவடியில் சரணடைந்தவன் பயப்பட தேவையில்லை.