செவ்வாயை மறக்காதீங்க!
ADDED :1593 days ago
பிரதோஷத்துக்கு சனிக்கிழமை முக்கியம். அது போல சங்கடஹர சதுர்த்திக்கு செவ்வாய்க்கிழமை முக்கியம். அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு, விநாயகர் ஒருமுறை சாப விமோசனம் கொடுத்தார். அப்போது ‘‘விநாயகப் பெருமானே! எனக்குரிய செவ்வாய்க்கிழமையும், தங்களுக்குரிய சதுர்த்தி திதியும் சேரும் நாளில் யார் தங்களை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் பாதிக்காது’’ என வாக்களித்தார். எனவே விநாயகர் வழிபாட்டில் செவ்வாய் முக்கியத்துவம் பெற்றது.