முதல் வழிபாடு இவருக்கே!
ADDED :1754 days ago
தனலாபம் கிடைக்க லட்சுமி ஹோமம் நடத்தினாலும், உடல்நலம் பெற சூரிய நாராயண பூஜை செய்தாலும், அம்பிகை அருள் பெற சண்டி ஹோமம் செய்தாலும் அதற்கு முன் விநாயகரை வணங்க மறக்க கூடாது. செய்யும் செயலில் விக்னம் (தடை) ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்குகிறோம். இதையும் விட இன்னொரு காரணமும் உண்டு. மனிதர்களான நமக்குத் தான் தடை ஏற்படும் என்பதில்லை. அருள்புரிவதில் தெய்வங்களுக்கும் தடை ஏற்படலாம். அதற்காகவும் விநாயகர் பூஜை செய்வது அவசியம்.