விநாயகர் கோயில் அரசமரத்தில் தீ
ADDED :1552 days ago
சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் துரை மடம் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காய்ந்த அரசமரத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. பக்தர்கள் தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். கீழராஜ குலராமன் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.