ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1819 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.
கொரோனா அச்சத்தால், வழிபாட்டுத் தலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.