அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதார கெளரி பூஜை துவக்கம்
ADDED :1586 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கேதார கெளரி சிறப்பு பூஜையில் பார்வதி தேவி,ஈசனை நோக்கி தவம் இருக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், புரட்டாசி மாத கேதார கௌரி விரத பூஜை தொடங்கியது. சிவபெருமானின் இடபாகம் வேண்டி பார்வதி தேவியார் 21 நாட்கள் திருச்செங்கோடு மலையில் பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. கேதார கெளரி சிறப்பு பூஜையில் பார்வதி தேவி,ஈசனை நோக்கி தவம் இருக்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதல் நாள் பூஜையில் கேதார கௌரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.