பாடபுத்தகத்தில் ஆண்டாள் பற்றி தவறான தகவல்: ஸ்ரீவி.,பக்தர்கள் எதிர்ப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: மனோன்மணி பல்கலை பாடபுத்தகத்தில், ஆண்டாள் பற்றி தரக்குறைவாக வெளியிட்டதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனோன்மணி பல்கலை கழக பாடபுத்தகத்தில் ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தேவதாசியாகவும், பெரியாழ்வாருக்கு தவறான முறையில் பிறந்தவராகவும், ஆண்டாள் மீது வல்லபதேவன் மன்னன் மோகம் கொண்டு பரிசுகள் அனுப்பியதாக கூறப்படும் சிறுகதையை, பாடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் பரம்பரையை சேர்ந்த அனந்தராம கிருஷ்ணன்,வேதபிரான் பட்டர் பெரியாழ்வார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆண்டாள் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.மகாலட்சுமியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஆண்டாள். இதில் தான் பிறக்கும் போது ,தனக்கு பெரியாழ்வார் தந்தையாகவும், துளசி தாயாகவும் இருப்பர் எனக்கூறியுள்ளார். தன்னை கோதை என்று அழைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். புராணங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. புராணங்களை சரியாக படிக்காமல் மாணவர்களிடையே ஆண்டாள் பற்றி தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும், இந்த பாடத்தை நீக்க ,பல்கலை கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
ஸ்தானிகம் ரமேஷ் தமிழில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை அனைத்து வைஷ்ண ஆலயங்களிலும் இன்றும் பாடப்பட்டு வருகிறது. ஆண்டாள் வாழ்ந்த காலம் 8ம் நூற்றாண்டு.ஆனால் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லபதேவன் மன்னன் அவர் மீது மோகம் கொண்டு பரிசனுப்பினான் எனும் தவறான தகவல்களை பரப்பி ,இந்து தெய்வங்கள், ஆண்டாள், பெரியாழ்வார் எதிராக , மாணவர்களை திசை திருப்பி விடும் செயல், கண்டனத்திற்குரியது. இந்த பாடத்தை அகற்றுவதோடு, இதை எழுதியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முத்துபட்டர் ஸ்ரீஆண்டாள் பற்றி வரலாறு தெரியாது,புனிதத்துவம் புரியாமல் ,பல்கலை பாடத்திட்டத்தில் தவறான தகவல் கூறியவர்களை கண்டிக்கிறோம், என்றார். விருதுநகர் மாவட்ட பா .ஜ., துணைத் தலைவர் சோலையப்ப்பன் ஆண்டாள், பெரியாழ்வார் மீது கேவலமான தகவல்களை பல்கலை பாடத்தில் சேர்த்துள்ளனர். மனோன் மணியம் பல்கலை நிர்வாகம் பாடத்தை ரத்து செய்வதோடு, அதை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.