புரட்டாசி சனிக்கிழமை கோவிலில் தரிசனம் ரத்து
ADDED :1492 days ago
திருப்பூர்: தமிழக அரசு, கொரோனா ஊரடங்கை பல்வேறு வழியில் தளர்த்தி வருகிறது. இருப்பினும், கோவில் வழிபாடுகளில் மட்டும் தளர்வு இல்லை; அக்., 31ம் தேதி வரை, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்கள் திறக்கப்படாது என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு துவங்குகிறது. பெருமாள் பக்தர்கள், விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு, ஊரடங்கு விதிமுறைகளால், பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், பெருமாளுக்கும், தாயாருக்கும் வழக்கமான புரட்டாசி பூஜைகள் நடக்கும்; பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.