ஒரு தேங்காய் ரூ.6.50 லட்சம்: கோவிலில் ஏலம் எடுத்த பக்தர்
ADDED :1491 days ago
பாகல்கோட்: பாகல்கோட் ஜமகண்டி அருகே உள்ள சிக்கலக்கி கிராமத்தில் மாளிங்கராயா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் இறுதியில், சுவாமி தேங்காய் ஏலம் எடுப்பது வழக்கம். இம்முறை திருவிழா கொரோனாவால் நேற்று முன் தினம் எளிய முறையில் நடந்தது. அப்போது, சாமி பல்லக்கில் கட்டப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதை விஜயபுரா மாவட்டம் திகோட்டா கிராமத்தை சேர்ந்த மகாவீரா, 45, என்பவர் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த சாமி தேங்காயை வீட்டில் வைத்து பூஜித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பக்தர்கள் ஆண்டு தோறும் போட்டி போட்டு ஏலம் எடுப்பது வழக்கம். இவ்வளவு தொகைக்கு தேங்காய் ஏலம் போனது இதுவே முதல் முறையாகும்.