உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை தேவஸ்தானத்திற்கு நவீன கேமிரா வாங்க நான்கு கோடி ரூபாய் நன்கொடை

திருமலை தேவஸ்தானத்திற்கு நவீன கேமிரா வாங்க நான்கு கோடி ரூபாய் நன்கொடை

திருப்பதி : அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்தில் வசிப்பவர் ரவி.பெருமாள் பக்தர். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தி சேனலான எஸ்விபிசிக்கு நான்கு கோடியே 20 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.


இந்த நன்கொடை பணத்தை வைத்து சேனலுக்கு தேவையான நவீன கேமிரா மற்றும் ஒளிபரப்பு சாதனங்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கூடுதலாக தேவைப்படும் 2 கோடியே 80 லட்ச  ரூபாயை இரண்டாவது தவனையாக தருவதாகவும்  தெரிவித்துள்ளார். ரவி ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக இதுவரை 40 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளார்.தனது நன்கொடைகளை பெரும்பாலும் இங்குள்ள நண்பர்கள் மூலமாகவே கொடுத்துவிடுவார். இப்போது கொடுத்துள்ள நன்கொடையை அவரது சார்பில் விஜயவாடாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !