புரட்டாசி முதல் நாள்: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1503 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுரிராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.