புரட்டாசி சனி வழிபாடு: தங்க கவசத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1449 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் தங்க கவசத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதித்தார். கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.