பக்தர்கள் சதுரகிரிக்கு வரவேண்டாம்: கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
                              ADDED :1504 days ago 
                            
                          
                          வத்திராயிருப்பு: தற்போது நிலவி வரும் நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று (செப் 18) முதல் 21 வரை, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம்போல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும், சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.