உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மநாப சுவாமி கோவிலில் நிதி தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

பத்மநாப சுவாமி கோவிலில் நிதி தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

புதுடில்லி: கேரளாவில் வருவாய் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பத்மநாப சுவாமி கோவிலுக்கு உதவ, கோவில் அறக் கட்டளைக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கோவில் நிர்வாக குழு மனு தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் நிர்வாகக் குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உரிமையில்லை: அதில் கூறப்பட்டுள்ள தாவது:கேரளாவில், கொரோனா காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. பத்மநாப சுவாமி கோவிலுக்கு மாதம் 1.25 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் மாதம் 60 - 70 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருவாய் வருகிறது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கோவில் அறக்கட்டளை, கோவில் செலவுகளை சமாளிக்க உதவ வேண்டும். அத்துடன் அறக்கட்டளை கணக்கை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் கூறியதாவது:அரச குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட கோவில் அறக்கட்டளைக்கு பூஜை மற்றும் சடங்குகள் செய்வதற்குத் தான் உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தில் தலையிட உரிமை இல்லை.உத்தரவு: கோவிலுக்கு தொடர்பில்லாத அறக்கட்டளையின் கணக்கை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. கணக்கு தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது. பத்மநாப சுவாமி கோவிலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள தங்க ஆபரணங்கள் சொந்தமாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !