உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

வில்லியனுார் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

வில்லியனூர் : வில்லியனுார் பகுதியில் உள்ள சிவாலயங்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சிறப்பு வாய்ந்தது என்பதால், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோவில் தலைமை அர்ச்சகர் சரவணன் தலைமையில் மூலவர் மற்றும் நந்திக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அலங்கரிக் கப்பட்ட சுவாமி உள்பிரகாரத்தில் உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருவேணீஸ்வரர் கோலில், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பிதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !