கோயிலில் ஸ்தல மரங்கள் நடும் திட்டம்
ADDED :1478 days ago
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் சிவகாமி அம்மன் சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயில் பழமையான சிவன் கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தல மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் கோயில் வளாகங்களில் நடப்பட்டது. கோயில் அர்ச்சகர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.