கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :1478 days ago
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, அமராவதி வனச்சரக பகுதியில், பிரசித்தி பெற்ற, நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, நேற்று இக்கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கரட்டுமடம், ஸ்ரீ சஞ்சீவராய பெருமாள் கோவிலில், மலைமேல் நடந்து சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.