உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் உற்சவம்

திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் உற்சவம்

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேர் உற்சவம் நடந்தது.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது., தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்பிரகார உலா நடக்கிறது. 9ம் நாளான நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. தேவநாதசாமி சமேத ஸ்ரீதேவி பூதேவி, திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கோவில் உட்பிரகாரத்தில் தேர் உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !