சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
ADDED :1518 days ago
சேலம்: சேலம் டவுனில் புகழ் பெற்ற ராஜகணபதி கோயில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த 11 நாட்களாக காலை மாலையில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. இன்று 12வது நாளையொட்டியும், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவையொட்டியும் விநாயகருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. காலை 9 மணி அளவில் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. இதன் பின்னர் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பிறகு சிறப்பு பூகை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் முன்புறம் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.