உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குமரி மாவட்டஇந்து திருத்தொண்டர் பேரவை நடத்தும் முக்கடல் சங்கமம் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது. பரசுராமர் விநாயகர் கோயில் முன்பக்தர்கள் திரண்டு இருந்தனர். பஞ்சசங்கு நாதம் ஒலிக்கமாதாபிதாகுரு ஆசி வேண்டல் குலதேவதை, இஷ்டதேவதை, கிராம தேவதை வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

பிறகு அணையாதீபம் ஏற்றுதல் மற்றும் கையிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. சப்தகன்னிகள்  அடியார்களுக்கு எதிர்சேவை நடந்தது. உமாமகேஸ்வர சிவாச்சாரியார் சங்கல்ப பூஜைக்கு பின் சமுத்திர அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமைதாங்கினார். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தேசிக சத்தியஞான பரமாச்சாரியசுவாமிகள், நாகப்பட்டினம் திருப்புகலூர் திருமடம் வேளாக்குறிச்சி ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முக்கடல் சங்கம மகாசமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தனர்.

போலீஸ்குவிப்பு தள்ளு முள்ளு : கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று காலை வரை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஏ ற்பாட்டாளர்களின் தொடர் முயற்சியின் பேரில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பினர். நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். லேசானதள்ளு முள்ளு நடந்தது. இதனை தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி பக்தர்கள் கடற்கரைக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !