மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை
ADDED :1807 days ago
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐந்து கருட சேவை நடக்கும். இந்தாண்டு கோயில்களுக்குள் நடந்த கருட சேவையில், வியூக சுந்தரராஜ பெ ருமாள், வீரராகவ பெருமாள், ஸ்ரீ யாக பேரர், மதன கோபால சுவாமி, ரங்கநாதர் அருள்பாலித்தனர்.