கோயில்களில் பவுர்ணமி பூஜை
ADDED :1469 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல், தாழைமடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரமக்குடி: பரமக்குடி குருநாதசுவாமி கோயில் வேலங்குடி கருப்பண்ணசாமிக்கு பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.