திருப்புல்லாணிக்கு திருமலை ஜீயர் வருகை
ADDED :1572 days ago
திருப்புல்லாணி : திருப்பதி சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள் திருப்புல்லாணிக்கு வந்தார்.புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சாதுர்மாசியவிரதம் பூர்த்தியான தினத்திற்காக சேதுக்கரையில் புனித நீராடினார்.முன்னதாக திருக்குறுங்குடி ஜீயர் மடத்தில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள்கோயிலுக்கு வந்த அவரை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் வரவேற்றனர்.