உண்மைக்கு தலைவணங்கு
கட்டளை இடுகிறார் ராமானுஜர்
* உண்மைக்கு தலை வணங்கு.
* மனதில் இருந்து ‘தான்’ என்ற அகந்தையை அகற்று.
* பிற உயிர்களிடம் இரக்கம் காட்டு.
* ஊருக்கு நல்லது செய்.
* பலன் கருதாமல் பிறருக்கு உதவு.
* தொண்டு செய். அதுவே கடவுளுக்கு நீ செய்யும் பணி.
* கடவுளுக்கு செய்யும் தொண்டும், குருநாதருக்குச் செய்யும் சேவையும் ஒன்றே.
* முன்னோர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்.
* வயிறை வளர்ப்போரிடம் பழகாதே.
* பிறரை பற்றி குறைகூறுபவனிடம் பேசாதே.
* கடவுளுக்கு நைவேத்யம் செய்த உணவை சாப்பிடு.
* புனித நுால்களில் குறிப்பிட்டுள்ள பொருட்களே பிரசாதத்திற்கு ஏற்றவை.
* கடவுளின் திருவுள்ளம் மகிழ்ச்சி ஏற்படும்படியாக பணி செய்.
* நீ பெற்ற இன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினை.
* நீ கற்றுக்கொண்டதை பிறருக்கும் கற்றுக்கொடு.
* பிறரது உயர்ந்த லட்சியத்திற்காக உன்னையே தியாகம் செய்.
* பிறப்பால் யாரையும் ஏளனம் செய்யாதே.
* பிறர் வாழ்வில் முன்னேற உதவியாக இரு.